டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, அபிஷேக் பச்சனின் அம்மாவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமைச்சராவதற்கு முன்பே அவர் ஒத்துக்கொண்ட படம் என்பதால் வார விடுமுறை நாட்களில் படப்பிடிப்புக்குப் வர ஒப்புதல் அளித்துள்ளாராம்.
மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி அமைச்சராக பதவியேற்பதற்கு முன் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்பில் வார இறுதி நாட்களில் மட்டும் ஈடுபடுவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஸ்மிருதி ராணி.
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதால் மத்திய அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆனார் ஸ்ம்ரிதி இராணி.
பாலிவுட் படத்தில்
இவர் அமைச்சராக பதவி ஏற்கும் முன் 'ஆல் இஸ் வெல்' என்ற பாலிவுட் படத்தில் ரிஷி கபூரின் மனைவியாகவும், அபிஷேக் பச்சனின் தாயாகவும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
பிஸியான ஸ்மிருதி இராணி
லோக்சபா தேர்தலில் பிஸியானதாலும், தேர்தலுக்கு பின் அமைச்சரானதாலும் ஸ்ம்ரிதி, படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் அலுவலக பணியில் மும்முரமாக இருக்கிறார்.
நடிக்க சம்மதம்
ஆல் இஸ் வெல் படத்தின் படப்பிடிப்பிற்காக இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் நேரம் ஒதுக்குவார் என தெரிகிறது.
வார விடுமுறை நாட்களில்
மேலும், அவர் நாடாளுமன்றம் இயங்காத வார இறுதி நாட்களில் மட்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி தொகுப்பாளினி ரோஜா எம்.எல்.ஏ
மத்திய அமைச்சர் மீண்டும் நடிக்க வருவதைப் போல இங்கே நடிகை ரோஜா எம்.எல்.ஏ ஆன பின்னரும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment