சென்னை: தமிழ் டிவி சேனல்களில் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதால் தமிழ் நடிகர்களுக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. எனவே டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்புவதை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்று சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவி நடிகை நளினி கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் நளினி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த அவர் முடிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பெண் உறுப்பினர்கள் அதிகம்
சின்னதிரை நடிகர்கள் சங்கத்தில் பெண்கள்தான் அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதனால் ஒரு பெண் தலைவராக வந்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்திருக்கிறார்கள்.
சொந்த கட்டிடம்
நானும் என்னால் முடிந்த பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறேன்.சங்கத்திற்கென்று சொந்த கட்டிடம் வாங்க முயற்சிப்பேன். இதற்கு எப்படி நிதி திரட்டலாம் என்று யோசித்து வருகிறேன்.
டப்பிங் சீரியல்கள்
எங்கள் சங்க உறுப்பினர்கள் பலர் வேலையின்றி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பல சேனல்கள் இந்தி, கொரியன், ஜப்பானிய சீரியல்களை டப் செய்து ஒளிபரப்புகிறது. இதனால் எங்கள் வேலை வாய்ப்பு பறிபோகிறது.
ஒன்றரை ஷிப்ட்
இது குறித்து சேனல்களுடன் பேச இருக்கிறேன். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்தால் ஒண்ணறை நாள் கால்ஷீட்டாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற தயாரிப்பாளர்களை வற்புறுத்த இருக்கிறேன் என்றார் நளினி.
Post a Comment