சென்னை: கத்தி விஷயத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
விஜய் நடித்துள்ள கத்தி படத்தை வெளியிட சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து படத்தின் விளம்பரங்களில் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனத்தின் பெயரை நீ்க்கிவிடுமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார். அவரது அறிவுரையை ஏற்று லைக்காவின் பெயரை நீக்க ஒப்புக் கொண்டுவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது. இந்த பிரச்சனை தீர ஆதரவளித்த அம்மாவுக்கு நன்றி என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் பெயரை நீக்க லைக்கா ஒப்புக் கொள்ளவில்லை என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கத்தியை ரிலீஸ் செய்ய விடவே மாட்டோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று விஜய் சொல்வது, போராட்டக்காரர்கள் வேறுவிதமாக சொல்வது ஆகியவற்றால் என்ன செய்வது என்று தெரியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் தான் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
Post a Comment