விஜய்யின் தூக்கத்தை விழுந்து விழுந்து கெடுக்கும் ரசிகர்கள்!

|

சென்னை: நடிகர் விஜய்யை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல அவரது ரசிகர்கள். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய ரசிகர்களால் நடிகர் விஜய் பெரும் அப்செட்டுக்குள்ளானார்.

இந்த நிலையில் விஜய்யின் படத்தைப் போட்டு மேலும் ஒரு பரபரப்புப் போஸ்டரை ஒட்டி அவரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளனர்.

சொத்துக் குவிப்புவழக்கில் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவுக்கு நன்றி தெரிவித்து புதிய போஸ்டர் விஜய் படத்துடன் வெளியாகியுள்ளது.

விஜய்யின் தூக்கத்தை விழுந்து விழுந்து கெடுக்கும் ரசிகர்கள்!

அந்தப் போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகம்...

நன்றி நன்றி நன்றி

தமிழகத்தில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கித் தந்த பிரதமர் மோடி அவர்களுக்கும், நீதிபதி குன்ஹா அவர்களுக்கும்

எங்கள் இயக்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விரைவில் 2016 மோடி + விஜய் = தமிழகம்

இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று அதில் போட்டுள்ளனர்.

விஜய் நிம்மதியைக் கெடுக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கே....!

பாவம்யா அவரு.. விட்டுடுங்க!

 

Post a Comment