நண்பன் தனுஷுடன் த்ரிஷா பார்ட்டி: ட்விட்டரில் போட்டோ

|

சென்னை: தனுஷுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா அவரை கட்டியணைத்தபடி போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

த்ரிஷா நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் இதுவரை தனுஷுடன் நடித்தது இல்லை. ஆனால் அவருக்கு தனுஷின் மாமனரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் ஆசை உள்ளது.

நண்பன் தனுஷுடன் த்ரிஷா பார்ட்டி: ட்விட்டரில் போட்டோ

இந்நிலையில் த்ரிஷா, தனுஷ் ஆகியோர் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டனர். அப்போது த்ரிஷாவும், தனுஷும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு எடுத்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் அவர்கள் சேர்ந்து நடிக்காவிட்டாலும் நல்ல நண்பர்களாக உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தனுஷ் அனேகன் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் ஷமிதாப் படத்தில் நடித்து வருகிறார். ஷமிதாபில் அமிதாப் பச்சன், ரேகா, அக்ஷரா ஹாஸனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment