சென்னை: தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு நடிகருக்கு ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் பாசக்காரர்கள். தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை கொண்டாடித் தீர்ப்பார்கள். கோலிவுட்டில் இதுநாள் வரை நடிகைகளுக்கு தான் கோவில் கட்டுவது, சிலை வைக்க ஆசைப்படுவதுமாக இருந்தார்கள் ரசிகர்கள் இல்லை இல்லை தீவிர வெறியர்கள். குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். அடுத்ததாக நயன்தாராவுக்கு கோவில் கட்ட வேட்டியை மடித்துக் கட்டினார்கள். ஆனால் நயனோ தனக்கு கோவில் எல்லாம் வேண்டாம் என்று கூறி நைசாக நழுவிக் கொண்டார்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது. ஆம் ஒரு சுபயோக சுபதினத்தில் விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு சிலை செய்தனர். விஜய் எத்தனையோ படங்களில் நடித்துள்ள போதிலும் அவர் படாதபாடு பட்டு ரிலீஸான தலைவா படத்தில் வரும் விஷ்வா பாய் கதாபாத்திரத்தில் சிலையை செய்து அதை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் வைத்துள்ளனர்.
விஜய்க்கு சிலை திறந்து வைத்திருப்பது பற்றி பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட இளையதளபதியோ கண்டும் காணாமல் கத்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் பிசியாக உள்ளார்.
Post a Comment