இனி முழுக்க நனைஞ்சிட வேண்டியதுதான்- இனிப்பு நடிகையின் புதிய முடிவு

|

அறிமுகம் தமிழில் என்றாலும் இனிப்பு நடிகை புகழ்பெற்றதெல்லாம் ஆந்திரத்தில்தான். அதன்பிறகு கோலிவுட் அவரை கண்டு கொண்டது.

ஆரம்பத்தில் சில படங்கள் ஹிட்டடித்தாலும், அடுத்தடுத்த படங்கள் பெட்டிக்குள் முடங்கியதில் நாயகிக்கு மட்டுமல்ல, கூட சேர்ந்து நடித்த நாயகர்களுக்கும் செம அடி.

போதும்மா உன் சகவாசம் என ஒப்பந்தம் செய்த நாயகர்கள் விலகிக் கொள்ள, இவரோ அவர்கள் கொடுத்த அட்வாட்சை திருப்பித் தர மறுத்ததோடு, ஒரு வாய்ப்பு கொடுங்க, சம்பளத்தைக் குறைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்று ஆஃபர் அறிவித்து வருகிறார்.

இருந்தாலும் நோ யூஸ். பார்த்தார் நடிகை.. கடைசி அஸ்திரத்தை எடுத்துவிட்டார். கவர்ச்சியின் எல்லை எதுவாக இருந்தாலும், அதைத் தொட்டுப் பார்க்க முடிவு செய்துவிட்டாராம்.

கை மேல் பலன்... இரு புதுப் படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்.

 

Post a Comment