மெட்ராஸ் என்ற அழுத்தமான சூப்பர் ஹிட் படம் தந்த ரஞ்சித்துக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன.
அதுவும் சாதாரணமான வாய்ப்புகள் அல்ல... சூர்யா மாதிரி சூப்பர் ஹீரோக்களிடமிருந்து வருகின்றன.
இந்தப் படம் பார்த்து மனசாரப் பாராட்டிய ரஜினிகாந்த், ரஞ்சித்தை உரிமையுடன் கலக்கிட்ட கண்ணா என்றாராம்.
மெட்ராஸ் படத்தை பார்த்து விட்டு, மிகவும் பரவசமாகிவிட்ட சூர்யா, ரஞ்சித்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என எண்ணி தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்குக் கொடுத்துள்ளார்.
சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்' படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சனுடன் இணைந்து நடித்துவருகிறார். விக்ரம் குமார் மற்றும் ஹரி இயக்கவிருக்கும் படங்களில் நடிக்கவும் பேசி வரும் நிலையில், அதற்கு முன்பாக ரஞ்சித்தின் படத்தில் நடிக்க விரும்புகிறாராம்.
அடுத்து ஆர்யாவை இயக்கும் ரஞ்சித், அதன் பிறகு சூர்யாவை இயக்குவார் என்கிறார்கள்.
Post a Comment