வாரிசு நடிகையின் ‘விலகல் - நெருங்கல்’ நாடகம்... அதிக சம்பளத்திற்காகத் தானாம் !

|

சென்னை: எப்படியும் ஆயுதப் பெயரைக் கொண்ட படம் தீபாவளிக்கு ரிலீசாகி விடும் என்ற நம்பிக்கையில், அப்பட நாயகனின் அடுத்த பட வேலைகள் வேகம் பிடித்துள்ளதாம். இப்படத்திற்காக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பத்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம்.

இது ஒருபுறம் இருக்க, வாரிசு நடிகை இப்படத்தில் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், தானே பூடகமாக அதனை மறுப்பது போல தனது சமூக வலைதளப் பக்கத்தில் தகவலை வெளியிட்டார் நடிகை.

ஆனால், தற்போது மீண்டும் வாரிசு நடிகையையே அப்படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாம் படத் தயாரிப்பு. முதலில் நடிகை நோ எனச் சொன்னதற்கும், தற்போது ஓகே எனச் சொன்னதற்கும் பின்னணியில் ஒரே ஒரு காரணம் தானாம்.

அதாவது அதிக சம்பளம். தெலுங்குப் படங்களில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடுவதற்கே நடிகை பெரும் தொகையை சம்பளமாக வாங்குகிறார். அப்படி இருக்கையில் தமிழில் நாயகியாக நடிப்பதற்கு மிகப் பெரிய தொகையை நடிகை எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது.

முதலில் அதற்கு படத்தயாரிப்பு ஒத்துக் கொள்ளாததாலேயே, சூசகமாக படத்திலிருந்து விலகுவதாக சமூக வலைதளப் பக்கத்தில் மிரட்டல் விடுத்தார் நடிகை என்கிறார்கள். பின்னர், ஒரு வழியாக நடிகை கேட்ட சம்பளத்திற்கு தயாரிப்புத் தரப்பு சம்மதம் தெரிவித்ததால், படத்தில் நடிக்க நடிகையும் ஓகே சொல்லி விட்டார் என்கிறார்கள் படத்தயாரிப்புக்கு நெருக்கமானவர்கள்.

 

Post a Comment