விஜய் டிவியில் தலை தீபாவளி கொண்டாடும் கல்யாணி!

|

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்த நடிகை கல்யாணிக்கு சமீபத்தில் திருமணமானது. இது அவருக்கு தலைதீபாவளி. அதேபோல தொகுப்பாளின் ரம்யா, டிடி ஆகியோருக்கும் இந்த தீபாவளிதான் தலைதீபாவளி.

தனது தலைதீபாவளியை விஜய் டிவியில் கொண்டாடுகிறார் நடிகை கல்யாணி. அக்டோபர் 22, புதன் கிழமை, தீபாவளி தினத்தன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்களைப் பற்றிய விபரம்.

சிவகுமார் சொற்பொழிவு

காலை 7 மணிக்கு இன்றைய இளைஞர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் பற்றி பேசுகிறார் நடிகர் சிவகுமார்.

பிரியாமணி

நடிகை ப்ரியா மணி அவருடைய அம்மாவுடனும், நடிகை விஜயலட்சுமி அவருடைய அம்மாவுடனும் கலந்து கொள்ளும் மாறுபட்ட நிகழ்ச்சி...

விஜய் ஸ்டார்ஸ்

விஜய் டிவியின் பிரபல நட்சத்திரங்களான திவ்யதர்ஷினி, பாவ்னா, கோபி, குயிலி, செஃப் தாமு, தாடி பாலாஜி, கல்யாணி, ரிஷிகேஷ், ஸ்டாலின், ரம்யா, மகேஸ்வரி, சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 குழுவினர், ஜோடி குழுவினர், அது இது எது குழுவினர் ஆகியோர் பங்கு பெறும் கலகலப்பான நிகழ்ச்சி விஜய் ஸ்டார்ஸ்.

மான் கராத்தே

திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்து வெளியான புத்தம் புதிய திரைப்படம் மான் கராத்தே காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் தலை தீபாவளி கொண்டாடும் கல்யாணி!

நான் சிகப்பு மனிதன்

திரு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஷால், லட்சுமி மேனன், இனியா மற்றும் பலர் நடித்து வெளிவந்த புத்தம் புதிய திரைப்படம். நான் சிகப்பு மனிதன் மேட்னிக்கு ஒளிபரப்பாகிறது.

காபி வித் டிடி

சிறப்பு காபி வித் டிடியில்‘பூஜை' படத்தின் நாயகன் விஷால், நாயகி ஸ்ருதிஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கு பெறுகிறார்கள். பூஜை பட அனுபவங்களைப் பற்றியும் சிறப்பு காபி வித் டிடியில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ராஜா ராணி

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சத்யன் மற்றும் பலர் நடித்துள்ள ராஜா ராணி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

விஜய் டிவியில் தலை தீபாவளி கொண்டாடும் கல்யாணி!

தலை தீபாவளி

விஜய் டிவியின் நட்சத்திரங்களான சித்தார்த், கல்யாணி, ‘சால்சா' மணி ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அவர்களது தலை தீபாவளிக் கொண்டாட்டத்தை விஜய் டிவியுடன் கொண்டாடுகிறார்கள். ஆனால், ரம்யா, டிடி ஆகியோரின் தலைதீபாவளி அவரவர் வீட்டிலேயே கொண்டாடுகின்றனர்

 

Post a Comment