ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்வேதா பாசுவை விடுதலை செய்ய ஹைதராபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக கைதானவர் சுவேதா பாசு. தேசிய விருது பெற்ற 23 வயது நடிகையான சுவேதா பாசு, தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்திலும் நடித்தவர். எனவே தேசிய அளவில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஸ்வேதா பாசுவை, மகளிர் காப்பகத்தில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தொடர்ந்து காப்பகத்தில் இருந்தார்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணை ஹைதராபாத், நாம்பல்லே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு கருத்தை கேட்ட நீதிமன்றம், ஸ்வேதா பாசுவை உடனடியாக காப்பகத்தில் இருந்து ரிலீஸ் செய்ய உத்தரவிட்டுள்ளது. இன்று இரவே அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment