நகர்வலம்... சென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் இன்னொரு படம்!

|

சென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கையை தத்ரூபமாகக் காட்டி வெற்றி பெற்றது கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான மெட்ராஸ். அடுத்து அதே பாணியில் இன்னொரு படம் வருகிறது. பெயர் நகர் வலம்.

ரெட் கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என். ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், கதை நாயகனாக 'காதல் சொல்ல வந்தேன்' பாலாஜி, புதுமுக நாயகி தீக்ஷிதா, பாலா, யோகி பாபு , 'நமோ' நாராயணன் உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

நகர்வலம்... சென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் இன்னொரு படம்!

படம் குறித்து இயக்குநர் மார்க்ஸ் கூறுகையில், "சென்னை நகரில் குடிநீர் விநியோகிக்கும் மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான நாயகன், பல ஏரியாக்களுக்கு குடிநீர் விட செல்கையில், ஓர் ஏரியாவின் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் உண்டாகும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான் கதை. அதனை சென்னை மக்களின் வாழ்வியலுடன் கலந்து யதார்த்தமாக திரைக்கதை அமைத்திருக்கிறேன். நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்," என்றார் .

சென்னை பூர்விக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கானா பாடலை, 'கானா புகழ்' இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்...

ஒளிப்பதிவு தமிழ் தென்றல், இசை பவன், படத் மதொகுப்பு மணிகண்ட பாலாஜி, கலை தேவா, சண்டை பயிற்சி 'ஃபயர்' கார்த்திக் , நடனம் கல்யாண், நந்தா, விமல் ராஜ், பாடல்கள் மோகன் ராஜன்.

சென்னை நகரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளான அண்ணா நகர், சைதாபேட்டை, கே. கே. நகர், கண்ணகி நகர் வீட்டு வசதி குடியிருப்பு போன்ற இடங்களில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

Post a Comment