‘ஸ்கைஃபால்' படத்திற்கு பிறகு அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம் வரும் அக்டோபர் 2015ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்புபவை ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படங்கள். இப்போது டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ்பாண்டாக நடித்து வருகிறார்.
ஸ்கைஃபாலுக்குப் பிறகு அடுத்த பாண்ட் படம் எப்போது என எதிர்ப்பார்த்து வந்தனர். அந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. நவோமி ஹாரிஸ் நாயகியாக நடிக்கிறார். ‘ஸ்கைஃபால்' படத்தின் இயக்குநர் சாம் மெண்டிஸ் இயக்குகிறார்.
‘ஸ்கைஃபால்' படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜான் லோகன், நீல் பர்விஸ், மற்றும் ராபர்ட் பர்விஸ் ஆகியோர் இப்படத்திற்கும் திரைக்கதை எழுதுகிறார்கள். படத்தின் டீஸர் என யூ டியூப்பில் வெளியான டீஸர் அதிகாரப்பூர்வ டீஸர் அல்ல என சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டேனியல் தெரிவித்துள்ளார்.
'' 'பாண்ட் 24' படத்தின் படப்பிடிப்புகள் முதற்கட்டத்தில் உள்ளன. மேலும் ‘பாண்ட் 24' மற்றும் 25, இரண்டும் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.
இதில் ‘பாண்ட் 24' அமெரிக்க நாடுகளில் அக்டோபர் 24, 2015ம் தேதியும் , உலக அளவில் நவம்பர் 6, 2015ம் தேதியும் வெளியாகும்.
அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டீஸரை இந்த வருட இறுதிக்குள் எதிர்பார்க்கலாம் '' என டேனியல் கிரெய்க் தெரிவித்துள்ளார்.
Post a Comment