லிங்கா, ஐ படங்களால் ரூ 500 கோடி முடங்கிக் கிடக்குதாமே!

|

பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கும்போது, அதில் உள்ள சவுகரியம் நினைத்ததை காட்சிகளாக்கும் சுதந்திரம். அசவுகரியம், படம் எப்போது வரும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலை.

காரணம், இந்த மாதிரி பெரிய படங்களை சரியான சூழல் பார்த்து வெளியிடாவிட்டால் விழும் அடி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

ஷங்கர் பாய்ஸ் என்று ஒரு படம் எடுத்தார். அன்றைக்கு அதுதான் பெரிய பட்ஜெட் படம். இன்றைக்கு தொலைக்காட்சிகளில் அந்தப் படத்தைப் போட்டால் ஜாலியாக கண்டு ரசிக்கும் இதே கூட்டம் அந்தப் படத்தை கிழித்து தொங்கப் போட்டது. வெளியான நேரம் வேறு சரியில்லை. விளைவு, அப்படியொரு அடி!

எனவே பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கும் சரியான சூழலுக்கு காத்திருக்க நேர்கையில், அவற்றில் பெருமளவு தொகை முடங்கி நிற்கிறது.

ரஜினியின் லிங்கா ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட படம். படத்தில் இடம் அணை கட்டும் காட்சிக்காக நிஜமான டேம் போலவே பெரும் பணம் செலவழித்து டேம் செட் போட்டிருக்கிறார்கள்.

ஷங்கரின் ஐ படம் தமிழ் சினிமா பிரமாண்டத்தின் உச்சம் எனும் அளவுக்கு ரூ 180 கோடி செலவில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த இரு படங்களும் ரிலீஸ் ஆகாத வரை ரூ 500 கோடி முடங்கியிருக்கும் நிலை.

லிங்கா, ஐ படங்களால் ரூ 500 கோடி முடங்கிக் கிடக்குதாமே!

லிங்காவைப் பொருத்தவரை அதில் எந்தத் தாமதமும் இல்லை. மே மாதம் ஆரம்பித்தார்கள். இந்த நவம்பரில் முடித்துவிட்டார்கள். டிசம்பர் 12-ம் தேதி ரிலீஸ் என்று அறிவித்துள்ளனர். இந்தத் தேதி மாறும்பட்சத்தில் பொங்கலுக்கு உறுதியாகிவிடும்.

ஷங்கர் படம் இந்த தீபாவளிக்கு வர வேண்டியது. கிராபிக்ஸ் பணிகளால் மேலும் ஒரு மாதம் தள்ளிப் போயிருக்கிறது.

இந்த இரு படங்களும் வெளியாகி, எதிர்ப்பார்த்த வெற்றியும் கிடைத்துவிட்டால், சினிமாவுக்கே ஜாக்பாட் அடித்தமாதிரிதான்!

 

+ comments + 5 comments

Anonymous
4 November 2014 at 21:33

Shankar has confirmed 65 CR as cost of I
Film under production for 3 years
Doubtful
All the best Shankar

Anonymous
4 November 2014 at 21:37

Bad time for ascar
After velayudham he is yet ti see a hit
All his films vallinam Nikki ennui kalyanam were good but flopped
I no one knows
Vikram has been giving continuous flops
Longest period in production
Only grey area is Shankar
Wait and watch

Anonymous
4 November 2014 at 21:39

Over publicity
Over built up
Over expectation
Over worry

Anonymous
4 November 2014 at 23:27

500 Lodi kanakku kaatungappa.
iT office thoongaraangala.?

Anonymous
4 November 2014 at 23:34

500kodiya.
Andappulugu
Aagasappulugu
Padam vassol seysppovatho maximum 200 cr
Meethi ennaseyvaanga.?
Endhiran record collection 227 cr
Thuppakki [167 cr
Shivaji 135 cr
Kaththi 105 cr not out going strong
Ithayella I Nd ling cross pan umma
Highly doubtful
Lingala May hit century
I may hit half century
500 Lodi great gap
Ascar what is ur reply.

Post a Comment