சென்னை: அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ள படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி என்று கூறப்படுகிறது.
அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜீத் தன்னை வைத்து வீரம் படத்தை இயக்கிய சிவாவின் படத்தில் நடிக்கிறார்.
அஜீத், சிவா மீண்டும் சேரும் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின் தயாரிப்பாளரும் ஏ.எம். ரத்னம் தான். தல 56 படத்தையும் நீங்களே தயாரித்துக் கொடுங்கள் என்று அஜீத் தான் ரத்னத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அஜீத் தற்போது நடித்து வருவது அவருடைய 55வது படம். அதனால் சிவா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்திற்கு தற்காலிகமாக தல 56 என்று பெயர் வைத்துக் கொள்வோம்.
தல 56 படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடியாம். விஜய் சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பட்ஜெட் ரூ.75+ கோடி என்று அதில் நடிக்கும் சுதீப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தல 56 படத்தின் படப்பிடிப்பு பொங்கல் பண்டிகை முடிந்ததும் துவங்குகிறதாம். படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.
+ comments + 4 comments
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து தீபாவளியன்று வெளிவந்திருக்கும் படம் கத்தி.
விவசாயிகள் சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளை அப்பட்டமாக சொல்லியிருப்பதோடு மட்டுமின்றி படத்தில் விஜய் எவ்வித பில்டப்பும் இன்றி இயல்பாகவே நடித்திருப்பார். இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சக ரீதியாகவும் பெரிய அளவில் வவேற்பு கிடைத்தது. 25 நாட்களை கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்னொரு புறம் வசூல் வேட்டையும் நடத்தவும் தவறவில்லை. படம் வெளியான முதல் 12 நாட்களிலேயே ரூ 100 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. இதை படத்தின் இயக்குனர் முருகதாஸே தெரிவித்திருந்தார். சமீபத்தில் மேலும் 10 கோடி வசூலித்து 120 கோடியை தாண்டியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அப்படத்தில் நடித்த நடிகர் சதீஸ் கத்தி வசூல் குறித்து இரண்டு தினங்களுக்கு முன் ஒரு டுவிட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதில் ‘கத்தி ஓவர்சிஸ் அனைத்தும் சேர்த்து ரூ 160 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ 200 கோடியை தொட வாழ்த்துக்கள்’ என டுவிட் செய்துள்ளார். கத்தி திரைப்படம் தான் இந்த வருடத்தில் ரூ 100 கோடியை தாண்டிய முதல் படம். இதற்கு முன்பு இதே முருகதாஸ்-விஜய் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி படமும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Vijay film will return the capital invested with huge profit
Vijay is the only actor who has been giving blockbusters
Out of 4 films crossing 100 crores club
Rajnifilm 2 films
Vijay 2 films
Enthiran, thuppakki, kaththi and Shivaji
200 cr 167 cr151 cr not out 120 crores
ththi crossed169 crores and mat cross thuppakki
Unbeatable record of vijay
Let others take this as.benchmark fir crossing
Impossible not found only in the functionary of vijay
Vijay the superstar
Post a Comment