கோவா திரைப்பட விழாவில் மராத்தி படங்களின் ஆதிக்கம்- தமிழ் ஒண்ணே ஒண்ணு!

|

கோவாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் 45வது சர்வதேச திரைப்பட விழாவில் மராத்தி மொழித் திரைப்படங்களே அதிக அளவு பங்கேற்கின்றன.

மராத்தியில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட டைம் பாஸ், லாய் பாரி மற்றும் துனியாதாரி போன்ற படங்கள் இந்த முறை திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் எஸ்ஸெல் விஷன் நிறுவனம் தயாரித்த எலிசபெத் ஏகதாசி, டாக்டர் பிரகாஷ் பாபா ஆம்தே, கில்லா, லோக்மான்ய கே யுக்புருஷ் ஆகிய நான்கு படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.

கோவா திரைப்பட விழாவில் மராத்தி படங்களின் ஆதிக்கம்- தமிழ் ஒண்ணே ஒண்ணு!

ஒரே நிறுவனம் தயாரித்த நான்கு படங்கள் இந்த விழாவில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, ஏக் ஹஸாராச்சி நோட், யெல்லோ போன்ற படங்களும் தேர்வாகியுள்ளன.

இந்த ஏழுபடங்கள் போக, திரைப்படமல்லாத பிரிவுக்கு மூன்று படங்கள் தேர்வாகியுள்ளன.

அவை: எ ரெய்னி டே, மித்ரா மற்றும் வித்யா. மொத்தம் 10 படங்கள் மராத்தியிலிருந்து பங்கேற்கின்றன.

மலையாளத்திலிருந்து 8 படங்களும் பெங்காலியிருந்து 5 படங்களும், அஸ்ஸாம் மொழிப் படங்கள் இரண்டும், தமிழ், கன்னடம், ஒரியா மொழிகளில் தலா ஒரு படமும் இந்த விழாவில் பங்கேற்கின்றன.

 

Post a Comment