பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார் நடிகர் சல்மான்கான். எதற்காக இந்தச் சந்திப்பு, என்ன பேசினார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதை முன்னோக்கி செயல்படுத்த 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். எம்எல்எம் மாதிரி அந்த 9 பேரும் தங்களால் இயன்ற அளவு நபர்களை அழைத்தனர்.
இந்த அழைப்பும் செயலும் சங்கிலித் தொடர் போல நிகழ்ந்து, பொதுமக்கள் ஆர்வத்துடன் தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது மோடியின் எதிர்ப்பார்ப்பு. ஆனால் இது வெறும் விளம்பர ஸ்டன்ட் மாதிரி மாறி வருகிறது.
பிரதமரால் தூய்மை இந்தியா திட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் சல்மான் கான். தூய்மை இந்தியா திட்டத்துக்கு தன்னை நியமித்ததற்காக மோடிக்கு சல்மான் கான் பாரட்டும் நன்றியும் தெரிவித்திருந்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தில் சல்மான்கான் தானாகவே தன்னை இணைத்து கொண்டார் என்று பிரதமர் மோடியும் சல்மான் கானைப் பாராட்டினார்.
இந்த நிலையில்தான் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் சல்மான்.
Post a Comment