சென்னை: காவியத் தலைவன் படத்தை குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா உள்ளிட்டோர் நடித்த காவியத்தலைவன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் காவியத்தலைவன் படத்தை இளையதளபதி விஜய் பார்த்துள்ளார். படம் குறித்து விஜய் கூறுகையில்,
அண்மை காலத்தில் வெளிவந்துள்ள சிறப்பான, முக்கியமான தமிழ் படம் காவியத் தலைவன். இது போன்ற படங்கள் வருவது அரிது. அதனால் மக்கள் குடும்பத்தோடு சென்று பார்த்து கொண்டாட வேண்டிய படம். அதிலும் குறிப்பாக வசந்தாபலன் சார் இது போன்ற திரைக்கதையை இது போன்ற பின்னணியில் தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
படத்தில் பணியாற்றிய சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நீரவ் ஷா, ரஹ்மான் சார் மற்றும் டெக்னீஷியன்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment