எஸ்எஸ் ராஜேந்திரன் படத் திறப்பு.. முன்னணி நடிகர்கள் வரவில்லை

|

சென்னை: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சமீபத்தில் மரணமடைந்தார். அவருடைய நினைவை போற்றும் வகையில் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் அவரது பட திறப்பு நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்.பிடி. தியாகராயர் அரங்கில் சமீபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், துணைத் தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்எஸ் ராஜேந்திரன் படத் திறப்பு.. முன்னணி நடிகர்கள் வரவில்லை

மதுரை ஆதீனம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உருவ படத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் நாசர், ராஜேஷ், சிவகுமார், சார்லி, நடிகைகள் காஞ்சனா, ஷீலா, குயிலி, குட்டி பத்மினி, இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் விக்ரமன், சித்ரா லட்சுமணன், ரமேஷ் கண்ணா, வினியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் அருள்பதி, பட தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

அதே நேரம், நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

 

Post a Comment