சென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள ஐ திரைப்பட டீசரை விட மிக குறைந்த பேரே ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள லிங்கா டீசரை யூடூப்பில் பார்த்துள்ளனர்.
2013ல் வெளியிடப்பட்ட 'கோச்சடையான்' படத்தின் டீசர் ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 'லிங்கா' படத்தின் டீசர் அது வெளியான ஒரு நாளைக்குள் ஒன்பது லட்சம் வியூஸ் மட்டுமே தாண்டியிருந்தது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐ' படத்தின் டீசர் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு ஒரே நாளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பார்க்க வைத்தது.
ஆனால், 'லிங்கா' டீசரால் 'ஐ' படத்தின் அந்தச் சாதனையை முறியடிக்க முடியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹிட் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் உருவாக்கியுள்ள லிங்கா படத்தால், 'ஐ' டீசரைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூடத் தொட முடியவில்லை.
ரசிகர்கள் நடிகர்களுக்காக மட்டுமின்றி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற காரணங்களாலும் டீசர்களை ஆர்வமுடன் பார்வையிடுகின்றனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. ஐ டீசர் ஹாலிவுட் படத்துக்கு இணையாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த லிங்கா உள்ளிட்ட படங்களின் டீசர்கள் அந்த பெஞ்ச்மார்க்கை எட்ட முடியவில்லை என்பதே இதற்கு காரணம்.
+ comments + 1 comments
Rajini.. vendam.. pavamm..
Post a Comment