கோவா: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் பங்கேற்கும் சர்வதேச திரைப்பட விழா இன்று கோவாவில் தொடங்குகிறது.
இந்த விழாவுக்கு அமிதாப் பச்சன் தலைமை தாங்குகிறார். ரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகருக்கான விருது இந்த விழாவில் மத்திய அரசு வழங்குகிறது.
45 வது சர்வதேசத் திரைப்பட விழா இது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் தருணத்தில் நடக்கும் விழா என்பதால் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இணைய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிகார் உள்ளிட்டோர் இன்று நடக்கும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.
11 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் 75 நாடுகளைச் சேர்ந்த 179 படங்கள் பங்கேற்கின்றன. இவற்றில் இந்தியன் பனோரமா பிரிவில் 41 படங்கள் பங்கேற்கின்றன.
விழாவின் துவக்க நாளான இன்று மக்மல்பஃப் இயக்கிய தி பிரசிடென்ட் படம் திரையிடப்படுகிறது.
அதற்கு முன் சர்வதேச திரையுலகப் பிரபலங்கள், இந்திய திரையுலக ஜாம்பவான்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூடிய மேடையில், அமிதாப் பச்சன் தலைமையில் ரஜினிகாந்துக்கு இந்திய திரையுலகின் சிறந்த பிரமுகருக்கான விருது மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் காந்தி படத்தை இயக்கிய ரிச்சர்டு அட்டன்பரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. காந்தி திரைப்படத்தை இலவசமாக போட்டுக் காட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment