மும்பை: திலீப் குமார் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
91 வயதாகும் திலீப் குமார், பாலிவுட்டின் மிகப் பெரிய நடிகர். சாதனையாளர். தன்னுடன் கதாநாயகியாக நடித்த சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில், நடிகர் சல்மான் கானின் வளர்ப்பு தங்கையான அர்பிதாவுக்கு மும்பையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த தம்பதியர் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில், திலீப் குமார் உடல் நிலை குறித்து மோசமான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதனையடுத்து, அவரது இல்லத்துக்கு ஏராளமான விசாரிப்புகள் குவியத் தொடங்கின. இந்த விவகாரத்துக்கு அமிதாப் பச்சன் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ‘ட்விட்டர்' பக்கத்தில், 'யூசுப் சாஹிப் (திலீப் குமாரின் இயற்பெயர்) பற்றி சில அடிப்படையற்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
நான் இப்போது தான் சாய்ரா பானுவுடன் தொலைபேசியில் பேசினேன். திலீப் குமார் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்,' என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment