ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் இரண்டாவது படமான வை ராஜா வை படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் நடிகர் தனுஷ்.
கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வை ராஜா வை'. சமீபத்தில் இப்படத்துக்காக யுவன் இசையில் தனுஷ் எழுதிய பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.
டாப்ஸி, விவேக், டேனியல் பாலாஜி, மனோபாலா ஆகியோர் நடிக்கும் 'வை ராஜா வை' படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
''வை ராஜா வை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷூக்கு நன்றி. இந்தக் காட்சியைப் படமாக்கும் போது கண்டிப்பாக உற்சாகமாக இருக்கும்,'' என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
தனது முதல் படமான 3-ல் தனுஷை நாயகனாக வைத்து இயக்கினார் ஐஸ்வர்யா. அந்தப் படம் முடிந்து வெளியான பிறகு, இனி மனைவியின் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார் தனுஷ்.
ஆனால் காலம் அவர் மனதை மாற்றியுள்ளது. ஐஸ்வர்யா அடுத்து இயக்கும் படத்தை தனுஷ் தயாரித்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.
Post a Comment