அடுத்த அடியை எடுத்து வைப்பதில் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்கிறார் லிங்குசாமி. அஞ்சானில் அண்ணன் சூர்யாவை இயக்கியவர், தம்பி கார்த்தியை வைத்து எண்ணி ஏழு நாள் படத்தை உடனே தொடங்கத் திட்டமிட்டார்.
ஆனால் இப்போது கொஞ்சம் நிதானமாக அந்தப் படத்தைப் பண்ணலாம் என முடிவெடுத்துள்ளார்.
படத்தின் கதை கார்த்திக்குப் பிடித்திருந்தாலும், அதை இன்னமும் மெருகேற்ற விரும்புகிறார் லிங்குசாமி. எனவே கார்த்தியிடம் இன்னும் மூன்று மாதம் டைம் எடுத்துக் கொள்ளலாம்.
அதுவரை வேறு ஒரு படத்துக்கு கால்ஷீட் தருவதென்றாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டாராம். கொம்பன் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருப்பதால், தேதிகளை வீணாக்காமல், நாகார்ஜூனாவுடன் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டாராம் கார்த்தி.
+ comments + 1 comments
AJITH " Ennai Arinthal" enkira SHAKILA padatil nadikirara???Shakila nadithu vetrinadai pota "Ennai Arinthal" padatil Asai nayagi no no Asai nayagan Asith nadikirara?? ENNA CHARACTOR ASITHUKKU??? Please tell me asith fans...
Post a Comment