பாலாஜி மோகன் - தனுஷ் படம் தொடங்கியது!

|

தனுஷ் தனது அடுத்த படத்தையும் அதன் படப்பிடிப்பு தொடங்கியதையும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் தமிழில் அனேகன், இந்தியில் ஷமிதாப் போன்ற படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இந்த நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குபவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் படங்களைத் தந்தவர்.

பாலாஜி மோகன் - தனுஷ் படம் தொடங்கியது!

தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் இந்தப் படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வாலுசன் தனுஷ் நடிப்பது இதுதான் முதல் முறை.

இந்தப் படத்தை சரத்குமாரும் ராதிகாவும் மேஜிக் பிரேம்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டரில், "பாலாஜி மோகன் படம் இன்று தொடங்கிவிட்டது. இது எனக்கு முற்றிலும் புதிய டீம். ரொம்ப ஆர்வத்தோடு உள்ளேன், விரைவில் தலைப்பு அறிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

 

Post a Comment