சென்னை: நடிகை ப்ரியா ராமனை விவாகரத்து செய்த நடிகர் ரஞ்சித், நடிகையும் நித்தியானந்தாவின் சிஷ்யையுமான ராகசுதாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார்.
மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி, நட்புக்காக, நரசிம்மா, வள்ளுவன் வாசுகி, பசுபதி மேபா ராசக்காபாளையம் உள்பட பல படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
ப்ரியா ராமனுடன்
ரஞ்சித்துக்கும் நடிகை பிரியாராமனுக்கும் 1999- ல் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நேசம் புதுசு என்ற படத்தை இருவரும் இணைந்து தயாரித்தனர்.
கருத்து வேறுபாடு
இந்த நிலையில் ரஞ்சித்துக்கும், பிரியாராமனுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார்கள். ரஞ்சித் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
ராகசுதாவுடன்
தற்போது நடிகை ராகசுதாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. ராகசுதா ‘தங்கத்தின் தங்கம்' என்ற படத்தில் ராமராஜன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர். தமிழச்சி, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான நடிகை கே.ஆர்.சாவித்திரியின் மகள்.
நித்தியானந்தாவின் சிஷ்யை
ராகசுதா ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார். நித்யானந்தாவின் சிஷ்யையாகி, பிடதி மடத்தில் கொஞ்ச காலம் ஆன்மீக பணியாற்றி வந்தார். இவர் மூலம் பல திரையுலக பிரபலங்கள் நித்தியானந்தாவின் பக்தர்களானார்கள்.
காதல்
இந்த நிலையில் ரஞ்சித்துக்கும் ராகசுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறி, இப்போது திருமணம் வரை வந்துள்ளது. ராகசுதாவை திருமணம் செய்து கொள்வதை ரஞ்சித்தும் உறுதிபடுத்தினார்.
வீட்டில் சம்மதம்
இதுகுறித்து நடிகர் ரஞ்சித் கூறுகையில், "ராகசுதாவும் நானும் நட்பாக பழகினோம். அவருடைய ஆன்மீக ஈடுபாடுகளில் நான் ஈர்க்கப்பட்டேன். இவருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுதுள்ளோம். எங்கள் திருமணத்துக்கு வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர். வருகின்ற 10- ந்தேதி சென்னையில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது", என்றார்.
Post a Comment