கவிஞர்களையே ஒருங்கிணைக்கும் ப சிதம்பரத்துக்கு காங்கிரஸை ஒன்றுபடுத்துவது இயலாத காரியமல்ல, என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
ப சிதம்பரம் தொடங்கியுள்ள எழுத்து இலக்கிய அமைப்பின் அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், "எழுத்து' இலக்கிய அமைப்பிற்கான அறங்காவலர் குழுவில், 3 கவிஞர்களை ஒன்று சேர்ப்பது என்பது காங்கிரஸ் கட்சியை ஒன்று சேர்ப்பதை விட சிரமமானது.
அதையே ஒரு செல்போனில் சாதாரணமாக செய்து முடித்துவிட்டார் ப சிதம்பரம். அப்படிப்பட்ட அவருக்கு, காங்கிரசை ஒன்றுபடுத்துவது என்பது கடினமல்ல.
இந்த ‘எழுத்து' அமைப்பில், ஜாதி, மதம், அரசியல் எதுவும் இல்லை. தமிழ் மட்டுமே உள்ளது.
அந்த காலங்களில் வேதங்கள் ஓதப்பட்டன. அவற்றை எழுதினால் மற்றவர்கள் படித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், வேதத்திற்கு ‘எழுதா கிளவி' என பெயரிட்டு தங்கள் இனத்தைக் கடந்து வேதம் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
தற்போது, புத்தகங்கள் விற்பனையாகவில்லை என்பது உண்மைதான். புத்தகங்களின் விற்பனை என்பது படைப்பாளிகளை பொறுத்தது அல்ல, படைப்பை பொறுத்தது. எனவே தரமான படைப்புகளை, எழுத்தாளர்கள் தாமே பரீட்சித்து பார்த்து, அதன்பிறகு ‘எழுத்து' அமைப்பிற்கு அனுப்பி வையுங்கள்," என்றார்.
Post a Comment