சென்னை: கணக்கு பார்க்காமல் பிறருக்கு உதவும் அஜீத்தின் குணம் அப்படியே அனௌஷ்காவுக்கும் வந்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன் என ஷாலினி தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜீத் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையும் சரிசமமாக பார்ப்பது, அவர்களுடன் அன்பாக பழகுவது தான் பலரையும் அவர் புகழ்பாட வைத்துள்ளது.
அவர் அன்பாக பழகுவதோடு மட்டும் அல்லாமல் பலருக்கு உதவி செய்துள்ளார், செய்தும் வருகிறார். உதவி என்று கேட்டு வருவோருக்கு உதவுவதோடு, யாருக்காவது உதவி தேவைப்படுகிறது என்று அறிந்தால் தானாக சென்று உதவும் குணம் உள்ளவர் அஜீத்.
உதவி செய்யும்போது இது குறித்து வெளியே தெரிவிக்கக் கூடாது என்று அஜீத் அன்புக் கட்டளை இடுவதால் பலர் தெரிவிப்பது இல்லை. சிலர் மனது தாங்காமல் நன்றி உணர்ச்சியில் வெளியே கூறியது தான் நமக்கு தெரியும்.
இந்நிலையில் இது பற்றி ஷாலினி பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,
பிறருக்கு உதவி செய்வது என்றால் அஜீத் கணக்கே பார்க்க மாட்டார். அவரின் அந்த குணம் எங்கள் மகள் அனௌஷ்காவுக்கும் அப்படியே உள்ளதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment