யட்சன் பட சூட்டிங்கிற்காக அஜீத் கட் அவுட்டுக்கு ஆர்யா பாலபிஷேகம் செய்துள்ளார்.
அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் ஆர்யாவை வைத்து ‘யட்சன்' என்ற படத்தை இயக்குகின்றார். பிரபல வார இதழில் எழுத்தாளர் சுபா எழுதிய தொடர்கதையை, சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து ‘யட்சன்' படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.
‘யுடிவி' மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் யட்சன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தில், அஜித் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிக்கிறார் என்பது அறிந்ததே. ஏற்கனவே இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால் அந்த செய்த வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.
அதே சமயம் அஜித் நடிக்காவிட்டாலும், அவரது ரசிகர்மன்ற தலைவராக ஆர்யா நடிப்பது உண்மை என்ற செய்தி உறுதியாகியுள்ளது.
அஜித் நடித்த ‘வீரம்' படத்திற்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்அவுட் மேல் ஏறி ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் அஜித்தின் தீவிர ரசிகர்கூட்டங்கள் என ஒரு படையே நடிக்கின்றனராம்.
இதை அப்படியே படத்தின் புரமோஷன் காட்சிகளில் இணைத்து, அஜித் ரசிகர்களை தியேட்டருக்கு திரட்டிக்கொண்டு வர விஷ்ணுவரதணும், ஆர்யாவும் மெகா ப்ளான் போட்டுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தில் ஆர்யாவின் பெயர் ‘சின்னா' வாம்.
இந்த பாலபிஷேகம் நடத்திமுடித்தவுடன்... அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் ஆர்யாவை சின்ன தல #thala_chinna ஹாஸ்டேக்யை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.
Post a Comment