பேரரசுவின் 'திகார்' இசை.... சென்னையில் வெளியிடுகிறார் கிரண் பேடி!

|

பேரரசு இயக்கத்தில் உருவாகியுள்ள திகார் என்ற படத்தின் இசையை இன்று சென்னையில் வெளியிடுகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண்பேடி.

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி உட்பட பல படங்களை இயக்கியவர் பேரரசு. தற்போது இவர் திகார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பேரரசுவின் 'திகார்' இசை.... சென்னையில் வெளியிடுகிறார் கிரண் பேடி!

இப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நாயகனாக நடிக்கிறார். நயாகியாக மும்பை மாடல் அகன்ஷா பூரி அறிமுகமாகிறார். பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘சாம்ராஜ்யம்' படத்தின் கதையின் தொடர்ச்சிதான் இந்தப் படம் என்கிறார்கள்.

சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஷபீர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

விழாவில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி இசையை வெளியிட, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகச் செம்மல் வா.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாரிசு சி.வா.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார்.

சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் இன்று பிற்பகல் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தாம் ஆவலுடன் இருப்பதாக கிரண்பேடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment