சென்னை: போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார் இயக்கும் படம் ‘காத்தம்மா'.
இப்படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஜில்லன் இசையமைக்க , பரிதி பாடல்களை எழுதுகிறார்.
ஒளிப்பதிவாளரின் இயக்கத்தில்...
காத்தம்மாவிற்கு ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எம்.டி.சுகுமார். இவர் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் சுமார் 50 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஆண்களைச் சுற்றிய கதைக்களம்...
தனது காத்தம்மா படம் குறித்து சுகுமார் கூறுகையில், ‘நமது பெரும்பாலான படங்களில் பாதிக்கப்பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து காரணமானவர்களை கொள்வது, பழிவாங்குவது தான் கதைகளாக்கப்பட்டுள்ளது.
பழி வாங்கும் கதை...
இந்த படத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணான " காத்தம்மா " எப்படி பழிவாங்கினாள் என்பது கதையாக்கப்பட்டுள்ளது.
பயிற்சிகள் பெற்ற ஆதிரா...
இந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார் படுத்திக் கொண்டார் அதன் பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தார்.
கமர்ஷியல் படம்...
இந்த படத்தின் கதை எல்லோராலும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment