சௌந்தர்யா இடத்தை நிரப்ப துடிக்கும் தீபா சந்நிதி!

|

சென்னை: மறைந்த நடிகை சௌந்தர்யாவின் இடத்தை நான் நிரப்ப வேண்டும்' என்ற கனவோடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளாராம் நடிகை தீபா சந்நிதி.

ஆர்யாவோடு ‘யட்சன்', சித்தார்த்தோடு ‘எனக்குள் ஒருவன்' என பரபரப்பாக தமிழில் அறிமுகமாகிறார் நடிகை தீபா சந்நிதி.

தனது முதல் கன்னடப் படமான சாரதிக்காக இரண்டு விருதுகல் வாங்கிய தீபா, அங்கு ஆறு படங்களை முடித்த கையோடு சென்னைக்கு வந்துள்ளார்.

சௌந்தர்யா இடத்தை நிரப்ப துடிக்கும் தீபா சந்நிதி!

அவர் தனது திரையுலகப் பிரவேசம், எதிர்கால லட்சியம் குறித்து ஆனந்தவிகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

என் குடும்பம்...

சிக்மகளூரு தான் என் சொந்த ஊர். அப்பா சசிதர், அங்கே காபி தோட்டம் வச்சிருக்கார். அம்மா நந்தா, இல்லத்தரசி. தம்பி பவீஷ் எம்.பி.ஏ.படிக்கிறான்.

ஆர்க்கிடெக்சர்...

நான் ஒரே செல்லப் பொண்ணு. ஆர்க்கிடெக்சர் படிக்கணும்னு ஆசை ஆசையா சேர்ந்தேன். ஏதாவது புதுசா பண்ணனும்னு தோணுச்சு. சினிமா ஆசையும் இருந்துச்சு.

மாடலிங்...

தன்னம்பிக்கை வளர்றதுக்காக மாடலிங் பண்ணினேன். சின்னச் சின்ன விளம்பரங்களில் நடிச்சேன். ஆனா, நடிகை ஆவேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை.

சினிமாவுக்கு நன்றி...

ஏதாவது ஒரு கிரியேட்டிவ் பீல்டில் இருக்க ஆசைப்பட்டேன். அப்படி, இப்படிச் சுத்தி கடைசியில் நடிகையாவே ஆகிட்டேன். நடிகை ஆனதில் இருந்து ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா இருக்கேன். இதுக்கு சினிமாவுக்குத் தான் நன்றி சொல்லணும்.

சித்தார்த் புத்திசாலி...

தமிழ்ல சித்தார்த்தான் எனக்கு முதல் அறிமுகம். அவர் புத்திசாலி நடிகர். சினிமா பத்தி அவ்ளோ விசயங்கள் பேசுவார்.

வசனங்கள் சொல்லிக் கொடுத்தார்...

தமிழ்ல முதல் படம்னு கொஞ்சம் தயங்கினேன். அவர்தான் வசனங்களை சின்னச் சின்னதா அழகா தமிழில் சொல்லிக் கொடுத்தார்.

ஜாலி ஆர்யா...

ஆர்யா இப்போ தான் அறிமுகம். துறுதுறுனு இருக்கார். ஜாலியா ஏதாவது கலாய்ப்பார். ஆர்யோவோட தன்னம்பிக்கை எனக்குப் பிடிச்சிருக்கு.

பிடித்த நடிகை...

நடிகை சௌந்தர்யா தான் எனக்குப் பிடித்த நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தினு எல்லா மொழிகளிலும் ஹிட் கொடுத்த நடிகை.

கனவு...

சௌந்தர்யா இடத்தை இதுவரைக்கும் வேற யாரும் நிரப்பலை. அந்த இடத்தை நான் நிரப்பணும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment