எந்திரன் படத்தின் வியாபாரத்தை லிங்கா முறியடிக்கக் காரணம் ரஜினி ஒருவர்தான், என்றார் இயக்குநர் ஷங்கர்.
மேலும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து எவ்வளவு வேகமாக படம் எடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லிங்கா' இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் பேசும்போது, " 'லிங்கா' படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு வேகமாக நடக்கின்றன.
படத்தில் பணி புரிபவர்கள் டபுள் படையப்பா என்று சொல்கிறார்கள். படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் பார்க்கும்போது 'சிவாஜி' படத்தில் பார்த்த ரஜினியைப் பார்க்க முடிகிறது.
இந்தப் படத்தோட வியாபாரம் 'எந்திரன்' பட வியாபாரத்தை தாண்டிவிட்டது என்று சொன்னார்கள். அனைத்திற்கும் காரணம் ரஜினிதான்.
இந்தப் படம் இவ்வளவு வேகமாக முடிந்தது ஆச்சர்யப்படுத்துகிறது. எவ்வளவு வேகமாகப் படமெடுக்க வேண்டும் என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.
Post a Comment