நடிகைக்கு ஐஸ் வைத்து 'லீடர்' பட வாய்ப்பை பெற்ற சுள்ளான் இயக்குனர்

|

சென்னை: நயன நடிகைக்கு ஐஸ் வைத்து லீடர் நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளாராம் அந்த 3 எழுத்து இளம் இயக்குனர்.

பார்ப்பதற்கு சுள்ளான் போன்று இருக்கும் அந்த 3 எழுத்து இயக்குனர் பிக்கப் டிராப் நடிகர், நயன நடிகையை வைத்து படம் எடுத்தார். அந்த படம் ஹிட்டானது. படப்பிடிப்பின்போது இயக்குனர் நயன நடிகையை அக்கா அக்கா என்று அழைத்து பாச மழை பொழிந்தாராம்.

அதன் பிறகு அவரது திருமண நிச்சயதார்த்தத்தை முன்நின்று நடத்தி வைக்குமாறு கேட்டதில் நடிகை நெகிழ்ந்துவிட்டாராம். தற்போது இயக்குனர் தனது நடிகை அக்காவின் பரிந்துரையின்பேரில் தான் லீடர் நடிகரை அடுத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளாராம்.

நடிகை லீடரை அணுகி என் தம்பி படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். நான் உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டதும் நடிகர் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது அவர் ஒப்புக் கொண்டுள்ள பேன்டஸி படத்தை முடித்த பிறகு சுள்ளான் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.

தம்பி ரொம்பவே தெளிவு தான்.

 

Post a Comment