சென்னை: என்னை அறிந்தால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை ரகசியமாக படமாக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளாராம்.
அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அஜீத் இருவேறு கெட்டப்புகளில் இருக்கும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படப்பிடிப்பு இன்னும் 4 வாரங்கள் நடக்க உள்ளது.
அஜீத்
கௌதம் மேனன் தனது படத்தின் ஹீரோவான அஜீத்துக்கே கிளைமாக்ஸ் என்னவென்பதை கூறாமல் வைத்திருந்தார்.
கிளைமாக்ஸ்
அண்மையில் தான் அஜீத்திடம் அவர் கிளைமாக்ஸ் காட்சியை விவரித்தார். அஜீத்துக்கு கிளைமாக்ஸ் மிகவும் பிடித்துவிட்டதாம்.
ரகசியம்
கிளைமாக்ஸ் காட்சிகளை ரகசியமாக படமாக்க முடிவு செய்துள்ளாராம் கௌதம் மேனன். க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் கசிந்துவிடாமல் இருக்கவே இந்த ஏற்பாடாம்.
அனுஷ்கா
கௌதம் அனுஷ்கா, அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரகசியமாக படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment