சென்னை: நான் புதிய திரைப்படம் தயாரிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.
எண்பதுகளில் தனது சகோதரர் ஆர்டி பாஸ்கருடன் இணைந்து பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் பல படங்களைத் தயாரித்துள்ளார் இளையராஜா. கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை, ராஜாதி ராஜா, சிங்கார வேலன் போன்றவையெல்லாம் பாவலர் கிரியேஷன்ஸ் படங்களே.
இளையராஜா தனியாக இளையராஜா பிக்சர்ஸ் என்று தொடங்கி ஆனந்த கும்மி, கற்பூர முல்லை போன்ற படங்களைத் தயாரித்தார்.
பின்னர் படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டது பாவலர் கிரியேஷன்ஸும் இளையராஜா பிக்சர்ஸும்.
இந்த நிலையில் இப்போது முன்னணி நாயகன் ஒருவரது கால்ஷீட்டை ராஜா பெற்றிருப்பதாகவும், விரைவில் படம் தயாரிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள இளையராஜா, தனக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்றார்.
Post a Comment