ஆர்யாவின் புதிய கப்பல் “மீகாமன்”!

|

சென்னை: தமிழில் மீகாமன் என்றால் "கப்பலைச் செலுத்துபவன்" என்று அர்த்தமாம். அதுபோலவே, ஆர்யா நடித்திவரும் "மீகாமன்" திரைப்படமும் தமிழ் சினிமாவை மற்றொரு தளத்திற்கு செலுத்தும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

ஆர்யா - ஹன்சிகா நடித்துள்ள இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை "நான் அவன் இல்லை", "மாப்பிள்ளை" உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆர்யாவின் புதிய கப்பல் “மீகாமன்”!

ஆக்‌ஷன் திரில்லலராக உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யாவுடன் ஏழு வில்லன்கள் மோதியுள்ளார்கள். ஆசிஷ் வித்யார்த்தி, மகா காந்தி, அஷுதோஷ் ராணா, ஹரிஷ், மகாதேவன், சுந்தன் ஷு பாண்டே இந்த ஏழு பேரும் ஆர்யாவுடன் "பைட்" செய்யும் வில்லன்களாம். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து இறுதிகட்டப் பணிகளை தொடங்கியுள்ளனர். கூடிய விரைவில் இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த இயக்குனர் , "மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். தமிழில் பெயர் வைத்து அதனை புரியவைக்க ஆங்கிலத்தில் TAGLINE போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கதாநாயகன் ஒரு காரியத்தை கையில் எடுத்து, அதனை எப்படி வெற்றிகரமாக முடிக்கிறான் என்பதை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக கதை அமைத்திருக்கிறேன். ஆர்யாவின் கெட்டப்பை இப்படத்தில் மாற்றியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment