சென்னை: லிங்கா படத்தில் வக்கீல்கள் மற்றும் நீதித் துறையை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக தணிக்கைக் குழுவிடம் புகார் செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஒருவர்.
அவர் பெயர் நன்மாறன். சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். இவர் தணிக்கை வாரியத்திடம் அளித்துள்ள புகார் மனு:
ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தில் வக்கீல்கள், நீதித்துறையைப் பற்றி ஆட்சேபிக்கத்தக்க வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தகைய காட்சிகளுடன் லிங்கா படம் வெளியானால், திரைத்துறையினருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும். எனவே சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்த பின்னர் லிங்கா படத்துக்கு சான்று அளிக்க வேண்டும். விருப்பப்பட்டால் படத்தைப் பார்வையிட வக்கீல்கள் சங்க நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
-இவ்வாரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment