திகார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, விழாவுக்கு வந்திருந்தவர்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் நான் பேசும் ஆங்கிலம் புரியுமா என்று கேட்டுவிட்டு, பின்னர் தமிழில் மொழி பெயர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
பேரரசு இயக்கியுள்ள திகார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் கிரண் பேடி. திகார் படத்தினா இசைத் தட்டை வெளியிட்டுப் பேசினார்.
அவர் பேசத் தொடங்கும் முன், "உங்களுக்கெல்லாம் நான் பேசற இங்கிலீஷ் புரியுமா?" என்று கேட்டார்.
உடனே கூடியிருந்த கூட்டம் (நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உள்பட) மையமாகத் தலையாட்டி வைத்தார்கள்.
இதைப் பார்த்த கிரண் பேடி, தன் பேச்சை மொழிப் பெயர்க்குமாறு தொகுப்பாளினியிடம் சொன்னார்.
தொடர்ந்து திகார் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த கிரண் பேடி, இந்த நிகழ்ச்சி ரொம்ப நகைச்சுவை மிக்கதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் நகைச்சுவை படத்தின் ட்ரைலரில் இல்லை. ரொம்ப ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருந்தது," என்றவர், தொடர்ந்து திகார் சிறையில் தான் மேற்கொண்ட சீர்த்திருத்தங்களை விலாவாரியாகச் சொன்னார்.
பின்னர் நிஜ திகார் பற்றி ஒரு படம் எடுக்குமாறும், அதற்கு தான் எழுதியுள்ள திகார் சிறை பற்றிய புத்தகம் உதவும் என்றும் கூறி வாழ்த்தினார்.
அவர் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் மொழிப் பெயர்ப்பதாகக் கூறி தொகுப்பாளினி சொதப்பி வைத்தார். கிரண் பேடி படத்தில் தேடிய நகைச்சுவை இந்த தொகுப்பாளினியின் மொழிப் பெயர்ப்பில்தான் இருந்தது!!
Post a Comment