மும்பை: மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரி நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது தோழியும் இயக்குனருமான ஃபரா கானுக்கு குறி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஃபரா கான் இயக்கிய ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்கையில் நடிகர்கள் ஷாருக்கான், போமன் இரானி மற்றும் சோனு சூத் ஆகியோருக்கு மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரி மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டை கொலை செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருந்த ரவி பூஜாரியின் ஆட்கள் 13 பேரை போலீசார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.
மகேஷ் பட்டை கொன்றால் விரைவில் பப்ளிசிட்டி பெற்று பாலிவுட்காரர்களை மிரட்டி பணம் பறிப்பது தான் ரவியின் திட்டம். ரவி ஷாருக்கான் மற்றும் அவரது தோழியான ஃபரா கானுக்கும் குறி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஷாருக் மற்றும் ஃபரா கருத்து தெரிவிக்கவில்லை. மிரட்டலை செயலாக்கும் முன்பு அதை முறியடிக்கும் அளவுக்கு மும்பை போலீஸ் திறமையானவர்கள் என்று மகேஷ் பட் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவிக்கு ஹேப்பி நியூ இயர் படத்தின் சர்வதேச உரிமையை தனக்கு அளிக்கவில்லை என்ற கோபமாம். மேலும் ஹேப்பி நியூ இயர் படத்தின் வருமானத்தில் ஒரு பங்கை தனக்கு கொடுக்கவில்லை என்று ரவி கோபத்தில் உள்ளாராம்.
ஹேப்பி நியூ இயர் உலக அளவில் ரூ. 350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் படம் ரிலீஸாகும் முன்பே ரூ.200 கோடி சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment