விழிமூடி யோசித்தால் விமர்சனம்

|

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: கேஜி செந்தில்குமார், நிகிதா, ஊர்வசி, பவர் ஸ்டார் சீனிவாசன்

ஒளிப்பதிவு: கௌபாசு

இசை: ஆதிஃப்

தயாரிப்பு - இயக்கம்: கேஜி செந்தில்குமார்

புதிய இயக்குநர் கேஜி செந்தில்குமார் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள ரொமான்டிக் த்ரில்லர் விழிமூடி யோசித்தால்.

கல்லூரிப் படிப்புக்காக கோவையிலிருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் செந்தில் குமார். ஊர்க்கார நண்பன் வீட்டில் தங்கியபடி கல்லூரிக்குச் செல்லும் செந்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் நிகிதாவைப் பார்த்ததும் காதல் வசப்படுகிறார்.

மறுநாள் கல்லூரிக்குச் சென்று பார்த்தால், தன் வகுப்பில்தான் நிகிதாவும் படிக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார். அப்போது இன்னொரு விஷயமும் தெரிகிறது. நிகிதாவுக்கு வாய் பேசமுடியாது என்பதுதான் அது. அதனால் என்ன என்று கூறி, காதலைத் தொடர்கிறார்.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

ஊரிலிருக்கும் அம்மா ஊர்வசிக்கு இந்த விவரங்கள் தெரியவருகிறது. அவர் கிளம்பி வந்து நிகிதாவைப் பார்த்து, ஓகேவும் சொல்லிவிடுகிறார்.

அப்போதுதான் ஒரு தீவிரவாத கும்பல் செய்யும் கொலையை நேரில் பார்க்கும் நிகிதா, அதைப் படமெடுத்துவிடுகிறார். இது தெரிய வந்து, நிகிதாவைப் பிடித்துவிடும் தீவிரவாதிகள், அந்த படங்கள் அடங்கிய மெமரி கார்டை நிகிதா தர மறுத்ததால் கொன்றுவிடுகிறார்கள்.

இவர்களை ஹீரோ செந்தில் எப்படி பழிவாங்குகிறான் என்பது மீதிக் கதை.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

விறுவிறுவென ஆரம்பிக்கிறது படம். கேமிரா நகர நகர நாமும் உடனே பயணித்து, அந்த முதல் கொலையைப் பார்த்து திடுக்கிடுகிறோம். எதற்காக இந்தக் கொலை என விவரிக்கும் ப்ளாஷ்பேக்கில் காட்சிகளை இன்னும்கூட அழுத்தமாக வைத்திருக்கலாம்.

நிகழ்கால பழிவாங்கலும், கடந்த கால காதலும் ஒரு இணை கோடுகள் மாதிரி பயணிப்பதாக திரைக்கதை அமைத்திருக்கிறார் செந்தில்குமார். அது பார்க்க புதுமையாகவும் உள்ளது.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

ஹீரோவுக்குதான் இத்தனை விசேஷ சக்தி இருக்கிறதே.. அதை வைத்து நாயகியை முன்பே காப்பாற்றி இருக்கலாமே என்ற கேள்விக்கு பதிலில்லை.

நடிப்பைப் பொறுத்தவரை நாயகன் செந்தில்குமார், நாயகி நிகிதா இருவருமே புதுமுகங்கள். ஓகே.. தேறிட்டாங்க எனும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

ஊர்வசி, பவர் ஸ்டார், பாலாசிங் போன்றவர்கள் தங்கள் வேலையைச் செய்திருக்கிறார்கள்.

முகமது ஆத்திப் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சில இடங்களில் பின்னணி இசை அதிர வைக்கிறது. ஒளிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

சினிமாவில் முதல் முயற்சிகள், பெரும் படிப்பினைகள். அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக உருவாக்க இந்தப் படிப்பினை உதவக்கூடும்!

 

Post a Comment