விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினாரே: 'குஷி'யில் 'காவியத்தலைவன்' சித்தார்த்

|

சென்னை: காவியத் தலைவன் படத்தை பார்த்த விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினார் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா உள்ளிட்டோர் நடித்த காவியத்தலைவன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த திரை பிரபலங்களும் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள்.

விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினாரே: 'குஷி'யில் 'காவியத்தலைவன்' சித்தார்த்

இந்நிலையில் இது குறித்து சித்தார்த் ட்விட்டரில் கூறுகையில்,

விஜய் அண்ணா காவியத்தலைவன் படத்தை பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. அவர் எங்களுக்கு போன் செய்து பாராட்டினார். ரசிகர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது.

சினிமா துறையினர் எங்களுக்கு போன் செய்து வாழ்த்தி வருகிறார்கள். நல்ல ஊக்கம். இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள்...வாவ்! என்று தெரிவித்துள்ளார்.

படம் பார்த்த விஜய் அதை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment