த்ரிஷா - ராணா காதல் முறிவுடன் என்னைத் தொடர்புபடுத்துவது சரியல்ல என்று கன்னட நடிகை ராகிணி கூறியுள்ளார்.
திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் மிக நெருக்கமாக இருந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் திடீரென இருவரும் பிரிந்துவிட்டதாகவும், இந்த காதல் முறிவுக்கு கன்னட நடிகை ராகிணி திவேதிதான் காரணம் என்றும் செய்திகள் பரவின.
ராகிணி திவேதியும் ராணாவலும் நெருக்கமாகப் பழகுவது த்ரிஷாவுக்குபத் தெரிய வந்ததால்தான் இந்த பிரிவு நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
இதனை ராகிணி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தdரிஷாவுக்கும் ராணாவுக்கும் இடையே உள்ள பிரச்சினை அவர்கள் சொந்த விஷயம்.
அதில் என்னை இணைத்து வதந்திகள் பரப்புவது வருத்தமாக இருக்கிறது. ராணாவுக்கும் எனக்கும் காதல் இல்லை. இதுபோன்ற வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. தயவுசெய்து இதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
Post a Comment