விருது விழாவில் ரஜினி பெயரை குறிப்பிட மறந்த மத்திய அமைச்சர்.. மன்னிப்புக் கேட்டார்!

|

கோவா: கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் ரஜினியின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர். இதனை உணர்ந்து பின்னர் மேடையிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

நேற்று தொடங்கிய கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் பங்கேற்றனர். இந்த விழாவில் ரஜினிக்கு நூற்றாண்டு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது.

விருது விழாவில் ரஜினி பெயரை குறிப்பிட மறந்த மத்திய அமைச்சர்.. மன்னிப்புக் கேட்டார்!

விருது வழங்கும் முன்னர் புதிதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மனோகர் பரிக்கர் பேசினார். அவர் தனது பேச்சில் கோவா ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், அமிதாப் பச்சன் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டவர், விழாவின் நாயகனான ரஜினி பெயரை மறந்துவிட்டார்.

பின்னர் இதை உணர்ந்த அவர், "ரஜினிகாந்த் பெயரைக் குறிப்பிடாததற்கு மன்னிக்க வேண்டும். நான் பெயர்களை ஒரு தாளில் எழுதி வைத்திருந்தேன். அதை எடுத்து வர மறந்துவிட்டேன்," என்றார்.

ரஜினியும் இதைப் பெரிதுபடுத்தாமல், அமைதியான புன்னகையுடன் தலையசைத்து ஏற்றுக் கொண்டார்.

 

Post a Comment