'பிளேயர் கில்லாடி'யாக பாலிவுட் செல்லும் அஜீத்

|

சென்னை: அஜீத் நடித்த ஆரம்பம் படம் இந்தியில் டப் செய்யப்பட்டு பிளேயர் கில்லாடி என்ற பெயரில் ரிலீஸாக உள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ராணா, நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடித்த படம் ஆரம்பம். கடந்த ஆண்டு ரிலீஸான இந்த படம் பாலிவுட் செல்கிறது. பாலிவுட்காரர்கள் தென்னிந்திய திரைப்படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

'பிளேயர் கில்லாடி'யாக பாலிவுட் செல்லும் அஜீத்

முதலில் ஆரம்பம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்களாம். இந்தியில் ஆரம்பம் படத்தை பிளேயர் கில்லாடி என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.

படத்தின் இந்தி டப்பிங் உரிமையை சினி கார்ன் பெற்றுள்ளதாம். தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. படம் அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அஜீத் தற்போது என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment