மும்பை: என்னை காதலித்தவர்கள் தான் என்னை பிரிந்து சென்றார்களே தவிர நான் யாரையும் கைவிடவில்லை என நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். அனுஷ்கா தற்போது கிரிக்கெட் வீர்ர விராத் கோஹ்லியை காதலித்து வருகிறார்.
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இதை ரன்வீர் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், தீபிகா ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் நடித்துள்ள கில் தில் படப் பாடல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் கூறுகையில்,
கில் தில் படமும் ராம் லீலா போன்று ஹிட்டாகும் என்று நம்புகிறேன். நான் கோவிந்தாவின் படம் பார்த்து வளர்ந்தவன். அவரால் தான் நான் நடிகன் ஆனேன். நான் அவரின் தீவிர ரசிகன். என் வாழ்வில் நான் யாரையும் காதலித்து கைவிடவில்லை. நான் தான் கைவிடப்பட்டுள்ளேன் என்றார்.
Post a Comment