லிங்கா படத்தின் நீளத்தை சற்றே குறைக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.
கடந்த வெள்ளியன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது லிங்கா படம்.
ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு தயாரித்திருந்தனர். இது மிக நீளமாக இருப்பதாக விமர்சனங்களில் குறிப்பிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து படத்தின் நீளத்தை 10 நிமிடங்கள் மட்டும் குறைக்க இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் முடிவு செய்தார்.
படத்தின் முன்பகுதியில் சில காட்சிகளையும், இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸில் சில காட்சிகளையும் நறுக்கியுள்ளார்.
இதன்படி லிங்கா இனி 2.45 மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும். ட்ரிம் செய்யப்பட்ட லிங்காவை நாளை முதல் காணலாம்.
படம் ஏற்கெனவே 4 நாட்களில் ரூ 130 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீசில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment