ஐ படம் 17000 அரங்குகளில் வெளியாகும் என்று ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறி வந்தது நினைவிருக்கும்.
ஆனால் இப்போது படம் 5000-க்கும் குறைவான அரங்குகளில்தான் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்த 'ஐ'படம் ரூ 180 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் பாடல்களை ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சென்னைக்கு அழைத்து வந்து வெளியிட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வருகிறது.
('ஐ' ட்ரைலர்)
இதில் விக்ரம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் மிகக் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். உடற்பயிற்சியாளர் கேரக்டரில் அவர் வருகிறார். மனிதனும், மிருகமும் கலந்த இன்னொரு கெட்டப்பிலும் தோன்றுகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் 'டப்பிங்'மற்றும் ரீ ரிக்கார்டிங் பணிகள் துவங்கின. செப்டம்பர் மாதம் இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. பொங்கலுக்கு 'ஐ'படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 5000 தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தயாரிப்பாளர்தான் இரு மாதங்களுக்கு முன்பு ஐ படத்தை உலகெங்கும் 17000 அரங்குகளிலும், சீனாவில் மட்டும் 7000 அரங்குகளிலும் வெளியிடப் போவதாகக் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
Post a Comment