மும்பை: தன்னால் ஒரே நேரத்தில் 20 தோசை சாப்பிட முடியும் என்றும், அதே சமயம் தனது ஆக்ஷன் ஜாக்சன் ஹீரோ அஜய் தேவ்கன் சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாதவர் என்றும் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து பிரபுதேவா இயக்கியுள்ள ஆக்ஷன் ஜாக்சன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்காக அஜய் மற்றும் சோனாக்ஷி உடல் எடையை குறைத்துள்ளனர்.
மகேஷ் பாபு நடித்த தெலுங்கு சூப்பர் ஹிட் படமான தூக்குடுவின் இந்தி ரீமேக்கான ஆக்ஷன் ஜாக்சன் நன்றாக உள்ளது என்று சிலரும், அய்யோ சாமி முடியலடா என்று சிலரும் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் தனக்கும், அஜய் தேவ்கனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசம் பற்றி பிரபுதேவா கூறுகையில்,
எனக்கு சாப்பாடு என்றால் பிடிக்கும். அஜய்க்கு சாப்பாட்டில் ஆர்வம் இல்லை. இரவு நேர உணவாக சாக்லேட்டை மட்டுமே என்னால் சாப்பிட முடியும். நான் ஒரே நேரத்தில் 15 முதல் 20 இட்லி அல்லது தோசை சாப்பிடுவேன். எனக்கு கேக், இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும். போர் அடிக்கும் வரை என்னால் சாப்பிட முடியும்.
அஜய் சாரின் பிறந்தநாள் ஏப்ரல் 2, என் பிறந்தநாள் ஏப்ரல் 3. நான் டான்ஸ் மாஸ்டரின் மகன். அவர் ஆக்ஷன் டைரக்டரின் மகன். நாங்கள் இருவருமே அமைதியானவர்கள், வம்புக்கு போகாதவர்கள் என்றார்.
Post a Comment