இன்று மட்டுமே ஏழு நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஒன்று கூட சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரசிகர்களுக்குப் பரிச்சயமில்லாதவை. கிடைத்த இடைவெளியில், கிடைத்த தியேட்டர்களில் ரிலீசானால் போதும் என்ற மனநிலையில் வெளியிடப்பட்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அழகிய பாண்டிபுரம், மனம் கொண்ட காதல், நாங்கெல்லாம் ஏடா கூடம், பகடை பகடை, ர, 1 பந்து 4 ரன் 1 விக்கெட், 13-ம் பக்கம் பார்க்க ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
இவற்றோடு சேர்த்து, 200 படங்கள் என்ற மைல்கல்லைத் தாண்டிவிட்டது தமிழ்சினிமா. இன்னும் 4 வாரங்கள் உள்ளன இந்த ஆண்டு முடிய. அதற்குள் இன்னும் 20 படங்கள் வெளியாகவிருக்கின்றன.
ஹாலிவுட்டின் பிரமாண்ட படம் எக்ஸோடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ் ஆங்கிலம் மற்றும் தமிழில் அதிக அரங்குகளில் வெளியாகியுள்ளது. இன்று வெளியான தமிழ்ப் படங்களை விட அதிக அரங்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
பிரபு தேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்த ஆக்ஷன் ஜாக்ஸன் இன்று தமிழகத்திலும் வெளியாகியுள்ளது.
Post a Comment